திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:36 IST)

சென்னையில் மழைக்கால மருத்துவ முகாம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துள்ள நிலையில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பெய்துள்ள கனமழையால் பல பகுதிகளில் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து சென்னையில் மழை பெய்து வருவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்திருந்தது. அதன்படி இன்று தொடங்கப்பட்ட முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முதல்வர் மக்கள் அனைவரும் முகாமை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.