வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (14:00 IST)

திமுக எம்.பி தடுக்கப்பட்ட விவகாரம்! – மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தருமபுரி எம்.பியை முதல்வரை சந்திக்க விடாமல் தடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி  நாமக்கலில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில் தருமபுரியில் கொரோனா நடவடிக்கைகளை முதல்வர் கண்காணிக்க வந்த போது அம்மாவட்ட திமுக எம்.பி செந்தில்குமார் முதல்வரை சந்திக்க வந்துள்ளார்.

ஆனால் முதல்வரை சந்திக்க விடாமல் செந்தில்குமாரை போலீஸ் தடுத்ததால் அங்கு வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அமைச்சர் சிவி சண்முகம் எதிர்கட்சியினரை முதல்வரை சந்திக்க விடாமல் தடுப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” அரசு விழாக்கள் மற்றும் ஆய்வுக்கூட்டங்களுக்கு தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அழைத்து, உரிய கண்ணியத்துடன் நடத்தி - மக்களின் குறைகளை எடுத்துரைத்துத் தீர்வுகாண வழிவகை ஏற்படுத்த வேண்டும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வலியுறுத்தியுள்ளார்.