Daily Horoscope
✕

Good for Nothing அரசு!.. மோசமான நிலையில் தமிழ்நாடு!.. முக ஸ்டாலின் கோபம்...

Updated: செவ்வாய், 27 அக்டோபர் 2026 (11:57 IST)
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையிலிருந்து நேற்று இரவு 17 கைதிகள் சிறைக்காவலரை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். அவர்களில் 4 பேர் பிடிபட்டிருக்கும் நிலையில் மீது 13 பேரை பிடிக்கும் பணியில் தமிழக காவல்துறை தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருப்பதாவது:

Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.

ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.

மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது’ என பதிவிட்டிருக்கிறார்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

முதல்வர் விஜய் ஒரு ஃபைல் திறந்ததுக்கே இப்படி!.. சிடி நிர்மல்குமார் பேட்டி..

அன்பில் மகேஷுக்கு முதல் வகுப்பு சிறை!.. நீதிமன்றம் உத்தரவு!..

31 ஆண்டுகளில் நடந்த பெரிய சம்பவம்!.. தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியது எப்படி?..

விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்த மைக்ரோசாப்ட்.. 60,000 ஊழியர்களை வெளியேற்ற திட்டமா?

இனி ஸ்மார்ட் வாட்ச் தேவையில்ல்லை.. ஒரே ஒரு ஏஐ மோதிரம் மோதும்.. இந்தியாவில் அறிமுகம்..

அடுத்த கட்டுரையில்
Show comments