1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ct nirmalkumar says dmk has to feel shy for this

முதல்வர் விஜய் ஒரு ஃபைல் திறந்ததுக்கே இப்படி!.. சிடி நிர்மல்குமார் பேட்டி..

ct nirmalkumar
கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் செயல்பட்ட தனியார் பள்ளிகளில் சான்றிதழ் கொடுப்பதற்காக கட்சி நிதி என்கிற பெயரில் ரூ.400 கோடி வரை லஞ்சம் பெற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த முக ஸ்டாலின்  ‘அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். தன் மீதான குற்றச்சாட்டுகளை அன்பில் மகேஷ் சட்டப்படி எதிர்கொள்வார். இது போன்ற கைது நடவடிக்கைகளால் மக்களை திசை திருப்பி தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் தவெகவின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது’ என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்நிலையில் இது தொடர்பாக இன்று காலை செய்தியாளரிடம் பேசிய தவெக அமைச்சர் சி.டி நிர்மல் குமார் ‘கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.சி, என்.ஜி.ஓ என அனைத்து பள்ளிகளிலும் வளைத்து வளைத்து கட்சி நிதி என்கிற பெயரில் ஒரு வருடத்தில் மட்டும் ரூ.400 கோடியை மிரட்டி வாங்கியிருக்கிறார்கள்.

இதற்காகத்தான் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு வருடத்தில் ரூ.400 கோடி என்றால் எத்தனை துறை இருக்கிறது?. ஆனால் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் முக ஸ்டாலின் இது பழிவாங்கும் நடவடிக்கை என சொல்கிறார்.. உண்மையில் அவர் இதற்கு வெட்கப்பட வேண்டும்.

முதலமைச்சரிடம் மூன்று ஃபைல்கள் இருக்கிறது என்று சொன்னதும் ‘திறந்து காட்டுங்கள்.. திறந்து காட்டுங்கள்’ என்று சவால் விட்டார்கள்.. தற்போது ஒரு ஃபைலை திறந்ததற்கு ஒரு முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்’ என்று அவர் பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அன்பில் மகேஷுக்கு முதல் வகுப்பு சிறை!.. நீதிமன்றம் உத்தரவு!..