1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 13 ஜூன் 2022 (12:13 IST)

மாணவர்களுடன் அமர்ந்து தமிழ் பாடத்தை கவனித்த முதல்வர்

mks classroom
மாணவர்களுடன் அமர்ந்து தமிழ் பாடத்தை கவனித்த முதல்வர்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தை கவனித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவ்வப்போது திடீர் திடீர் என பல்வேறு அலுவலகங்களில் சோதனை செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு செய்யச் சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் நடத்திக்கொண்டிருந்த தமிழ் ஆசிரியை பாடம் நடத்தும் முறையை மேசையில் உட்கார்ந்து மாணவர்களுடன் மாணவர்களாக கவனித்தனர்
 
இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இதுகுறித்து அவர் மாணவர்களுடன் பேசியபோது படிக்காமல் சாதித்ததாக யாராவது ஒருவரை உதாரணம் காட்டினால் படித்து சாதித்தவர்களை லட்சம் பேரை நாம் காட்ட முடியும் என்றும் படிக்காமல் சாதிக்க முடியும் என்று யாராவது சொன்னால் அது வெறும் ஆசை வார்த்தை மற்றும் சூழ்ச்சி என்றும் தெரிவித்தார்.