புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (16:20 IST)

சிறுநீரகத்துக்கு 3 கோடி ரூபாய்: நூதன மோசடி

ஈரோடு மாவட்டத்தில் பிரபல மருத்துவமனையின் பெயரில் சிறுநீரகங்களுக்கு கோடி கணக்கில் பணம் தருவதாக கூறி ஏமாற்றிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் உள்ள பிரபல மருத்துவமனையின் பெயரில் ஃபேஸ்புக்கில் பக்கம் தொடங்கிய அந்த கும்பல் அதன் மூலம் சிறுநீரகங்கள் கொடுத்தால் 3 கோடி ரூபாய் பணம் தருவதாக விளம்பரம் செய்துள்ளார்கள்.

அந்த விளம்பரத்தை நம்பி அதற்கு பதிவு செய்ய பலர் முன்வந்தபோது அவர்களிடம் 7500 ரூபாய் பதிவுத்தொகை கட்டவேண்டுமென கூறியுள்ளார்கள். பலர் பதிவுத்தொகை கட்டிவிட்டு பதில் வரும் என காத்திருந்திருக்கிறார்கள். எந்த பதிலும் வராததால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை அணுகி விசாரித்தபோது அவர்கள் அப்படி எந்த விளம்பரமும் செய்யவில்லை என கூறியிருக்கிறார்கள்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அந்த போலி கணக்கை பற்றிய தகவல்களை ஆராய்ந்தபோது அது மிசோரம் பகுதியில் இருந்து செயல்பட்டு வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதுபோன்ற பொய்யான மோசடி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.