இ பாஸ் ரத்து சவாலானது: விஜயபாஸ்கர் தடாலடி!!
இ பாஸ் ரத்து அரசு இன்னும் முடிவுகளை எடுக்காத நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இது குறித்து பேசியுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் மாவட்டங்களுக்குள் செல்லவும் மாநிலத்தில் இருந்து வெளியே செல்லவும் இபாஸ் கட்டாயம் என்று அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிக்கலை அனுபவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மத்திய அரசு அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு எழுதிய கடிதத்தில் மாநிலங்களுக்குள்ளும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.
மத்திய அரசின் இந்த உத்தரவை ஏற்று புதுச்சேரியில் இன்று முதல் இபாஸ் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்து தமிழகத்திலும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய அதிக வாப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அரசு இன்னும் முடிவுகளை எடுக்காத நிலையில் மத்திய அரசு அறிவித்தது போல் இ-பாஸ் முறைக்கு தளர்வு அளித்தால் கொரோனாவை கட்டுபடுத்துவது கண்காணிப்பது சவாலானதாக இருக்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.