1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Quarterly exam will be after corona decrease

காலாண்டு தேர்வு நடத்துவது எப்போது? செங்கோட்டையன் பதில்!!

#CoronaVirusம் #Exams
கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக பள்ளிகள் திறக்கப் படவில்லை. அதோடு பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது.  
 
இந்நிலையில் கடந்த ஜூன் மாதமே இந்த கல்வி ஆண்டுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை.  
 
ஏற்கனவே மூன்று மாதங்கள் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஆகி விட்ட நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரியாத நிலை உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் மாணவ்ர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! சுற்றி வளைக்கப்படும் ரௌடிகள்; சென்னை போலீஸ் அதிரடி!