புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜூலை 2020 (12:45 IST)

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! – மருத்துவமனையில் அனுமதி!

அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஏற்கனவே கொரோனா உறுதியான நிலையில் தற்போது மின்சார துறை அமைச்சருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிமுக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ஐந்து பேருக்கும், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொற்று உறுதியாகும் முன்னர் வரை, அதாவது நேற்று முன் தினம் வரை அதிமுக கட்சி சார்ந்த கூட்டங்கள், நாமக்கலில் நடந்த நிவாரண பொருட்கள் வழங்கும் கூட்டம் உள்ளிட்டவற்றில் அமைச்சர் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பிற அமைச்சர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.