ஈரோடு இடைத்தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
ஈரோடு இடைத்தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் முடிவுகளை அறிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தோல்வி பயத்தில் உள்ளார் என்றும் எத்தனை முகமூடி போட்டுக்கொண்டு ஈரோட்டிற்கு வந்தாலும் அதிமுக இந்த தேர்தலுடன் காணாமல் போகும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழர் நலன்களை அடகு வைப்பதில் ஆர்வம் காட்டுபவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார் என்றும் ஊழலின் மொத்த உறைவிடமாக அதிமுக இருந்ததால்தான் தேர்தலில் தோல்வி அடைந்தது என்றும் அவர் தெரிவித்தார். உதய்மின் திட்டத்தை தமிழகத்தை இணைத்தால் மின்வாரியம் தற்போது கடனில் உள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran