1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (11:49 IST)

ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெற பாடுபடுவோம்: அண்ணாமலை பேட்டி

annamalai
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என்பதும் அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் அவருடைய வெற்றிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
ஒரு ஆளுங்கட்சி இடைத்தேர்தலுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தமிழக வரலாற்றிலேயே நடைபெற்றது கிடையாது என்றும் இதிலிருந்து திமுகவுக்கு பயம் வந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது என்றும் தெரிவித்தார். 
 
ஒரு சாதாரண இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சூறாவளி பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர்கள் பேசினாலே எங்கள் பக்கம் தானாகவே வாக்குகள் வந்துவிடும் என்றும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran