திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (11:45 IST)

ஆன்லைன் ரம்மிய விட முடியாது! விரைவில் புது சட்டம்! – அமைச்சர் ரகுபதி உறுதி!

ஆன்லைன் ரம்மி மீதான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் பலரும் பாதிக்கப்படுவதாக பலரும் குற்றம் சாட்டிய நிலையில் தமிழக அரசு புதிய சட்டம் வாயிலாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்தது. இதுகுறித்து சம்பந்தபட்ட நிறுவனங்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மொத்தமாக தடை விதிக்க முடியாது என்று கூறி ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் மீதான தடையை நீக்கியுள்ளது. மேலும் தமிழக அரசு தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றலாம் என்றும் அதற்கு தடை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி “ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் வலுவான சட்டம் விரைவில் இயற்றப்படும்” என உறுதி கூறியுள்ளார்.