ஒரு கோவில்தான் டார்கெட்; அடிக்கடி வருவான்! – பெருங்களத்தூரில் சனிக்கிழமை திருடன்!
சென்னையில் கோவில் ஒன்றில் திருடன் ஒருவன் தொடர்ந்து திருடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள ஒரு பகுதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியலில் அடிக்கடி பணம் காணாமல் போவதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் அளித்ததுடன், கோவிலில் சிசிடிவி கேமராவையும் பொருத்தியுள்ளனர்.
ஆனாலும் மீண்டும் பணம் காணாமல் போன நிலையில் சிசிடிவியை ஆய்வு செய்ததில் திருடன் ஒருவன் சனிக்கிழமைகளில் மட்டும் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து உண்டியலில் திருடுவது தெரிய வந்துள்ளது. ஒருநாள் திருடனை மறைந்திருந்து பொதுமக்கள் பிடிக்க முயன்ற நிலையில் அவன் தப்பியோடியுள்ளான். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சனிக்கிழமை திருடனை தேடி வருகின்றனர்.