ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (12:30 IST)

சண்டை போட்ட அதிமுகவினர்: எம்ஜிஆர் பாட்டு பாடி தடுத்த அமைச்சர்!

உட்கட்சி தகராறால் சண்டை போட்டுக் கொண்ட அதிமுகவினரை அமைச்சர் பாட்டு பாடி தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆவடியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் மாஃபாவின் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஆவடி அதிமுக நிர்வாகிகள் சிலர் கலந்து பேசி பிரச்சினையை தீர்த்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரின் ஆதரவாளரான நிர்வாகி ஒருவர் இந்த கைகலப்பு சம்பவம் குறித்து மாஃபா பாண்டியராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, பிரச்சினையை சமாளிக்க ஒரு எம்.ஜி.ஆர் பாடலை எடுத்து விட்டிருக்கிறார் மாஃபா.

எம்.ஜி.ஆர் பாடலை அவர் பாட தொடங்கியதும் சலசலப்பு ஏற்பட்ட கூட்டம் சைலண்ட் ஆக, பிறகு ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியுள்ளார் அமைச்சர் பாண்டியராஜன்.