திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (10:49 IST)

ஜெயலலிதாவால் மாமியார், மருமகள் சண்டை நின்றுள்ளது – அமைச்சர் செல்லூர் ராஜூ

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ பல வீடுகளில் பல்வேறு சண்டைகளும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய நலத்திட்டங்களால் நின்றுள்ளதாக கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் அதிமுக சார்பில் தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மேலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றன. மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக அமைச்சர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பிறகு பேசிய அவர் ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கா பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கினார். அதிமுக அரசு பெண்களின் நலனுக்கு என்றும் முன்னுரிமை அளிக்கும். ஜெயலலிதா வழங்கிய இலவச பொருட்களான மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றால் தமிழகத்தில் மாமியார், மருமகள் சண்டை நின்றுள்ளது” என்று கூறியுள்ளார்