வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (11:55 IST)

இந்தியன் 2 விபத்து; தயாரிப்பு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்; லைகாவுக்கு கமல் கடிதம்

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான நிலையில், ”விபத்து நேர்ந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்” என லைகாவுக்கு கமல் கடிதம் எழுதியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள்.

மேலும் இதில் 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் லைகா, நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிரேன் ஆப்ரேட்டர் ராஜனை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் லைகா நிறுவனத்திற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார், அதில் படபிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பு உறுதி செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதில், “விபத்து நேரிட்டால் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்” என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.