வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (15:16 IST)

தங்கம் விலை ரூ.69 குறைவு: மேலும் குறைய வாய்ப்பு உண்டா?

கடந்த சில நாட்களில் படு வேகமாக எகிறிய தங்கத்தின் விலை இன்று மெல்ல சரிவை சந்தித்து வருகிறது.

உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகமான சூழலில் தங்கம் விலை கிடுகிடுவென ஏற தொடங்கியது. கடந்த வாரம் ரூ.32 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ.33,328 க்கு விற்பனை ஆகி வந்தது.

தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்துள்ளது ரூ.32,776 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.69 குறைந்து ரூ.4,097க்கு விற்பனையாகி வருகிறது.

மேலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதா என மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் குறைவதற்கு வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.