திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (11:45 IST)

தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை உண்மைதான்… அமைச்சர் மா சுப்ரமண்யன் தகவல்!

தமிழகத்தில் தற்போதைக்கு தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது உண்மைதான் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு இடங்களில் அரசே முகாம் அமைத்து தடுப்பூசிகள் செலுத்தி வரும் நிலையில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது. மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசிகள் முற்றிலும் தீர்ந்ததால் முகாம்கள் இன்று மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து இன்று பேசியுள்ள அமைச்சர் மா சுப்ரமண்யன் ‘தமிழகத்தில் தடுப்பூசிகள் இல்லை என்பது உண்மைதான். 13 ஆம் தேதிக்குள் 6.5 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன’ எனக் கூறியுள்ளார்.