தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு; மூடப்பட்ட முகாம்கள்!
தமிழகம் முழுவதும் முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு இடங்களில் அரசே முகாம் அமைத்து தடுப்பூசிகள் செலுத்தி வரும் நிலையில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது.
மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசிகள் முற்றிலும் தீர்ந்ததால் முகாம்கள் இன்று மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டு நாட்களில் மத்திய அரசிடமிருந்து 1 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.