திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 ஜூன் 2021 (11:39 IST)

சிக்கன் ஆர்டர் செய்தவருக்கு வறுத்த துணியை அனுப்பிய உணவகம்!

கொரோனா காரணமாக உணவுப் பொருட்களை ஆன்லனில் ஆர்டர் செய்யும் வழக்கம் அதிகமாகியுள்ளது.

அந்த வகையில் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒரு பெண் தன் மகனுக்காக பொறுத்த சிக்கன்களை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த உணவு வீட்டுக்கு வந்த பின்னர் பிரித்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிக்கனுக்கு பதிலாக மசாலாவில் நனைத்து பொறிக்கப்பட்ட துணிதான் அதில் இருந்துள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அவர் சமூகவலைதளத்தில் அதைப் பகிர, உலகெங்கும் கவனம் ஏற்பட்டது. இதையடுத்து சம்மந்தப்பட்ட உணவு நிறுவனம் தங்கள் தவறுதலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளது.