திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (12:22 IST)

500 கிலோ மெகா சைஸ் மாலை: ஏற்க மறுத்த அமைச்சர்

500 கிலோ மெகா சைஸ் ரோஜா மாலையை ஏற்க மறுத்து அமைச்சர் கே.என்.நேரு திமுகவினரை அப்செட்டாக்கி சென்றார். 

 
திருச்சியில் திமுகவினர் கிரேன் மூலம் கொண்டு வந்து அணிவிக்க முயன்ற 500 கிலோ மெகா சைஸ் ரோஜா மாலையை ஏற்றுக்கொள்ள அமைச்சர் கே.என்.நேரு மறுத்துவிட்டார். ஒரு லட்ச ரூபாய் செலவில் உருவமைக்கப்பட்ட இந்த மாலையை அணிவிக்க திமுகவினர் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் காத்திருந்தனர். 
 
அப்போது அங்கு வந்த அமைச்சர் கே.என்.நேரு மாலையை பார்த்துவிட்டு ஆடம்பரம் வேண்டாம் என கூறி மாலையை ஏற்றுக்கொள்ளாமல் சென்றுவிட்டார்.