திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 நவம்பர் 2021 (10:38 IST)

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்! – அமைச்சர் அன்பில் மகேஷ்!

கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவியின் பெற்றோரை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிட அமைச்சர் அன்பில் மகேஷ் “போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். பள்ளி மாணவ மாணவிகளுக்கு 14417 என்ற உதவி எண் உள்ளது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் மாணவர்கள் அதில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளார்.