மாசாணியம்மன் திருக்கோயிலின் பூக்குழி இறங்கும் திருவிழா
மாசாணியம்மன் திருக்கோயிலின் பூக்குழி இறங்கும் திருவிழா
கரூர் அருகே சூடாமணி மாசாணியம்மன் திருக்கோயிலின் 24 ம் ஆண்டு பூக்குழி (குண்டம்) இறங்கும் திருவிழா – 700 க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கரூர் டூ சின்னதாராபுரம் சாலையில் உள்ள சூடாமணி, அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோயிலின் 24 ஆம் ஆண்டு பூக்குழி (குண்டம்) இறங்கும் திருவிழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சுற்றியுள்ள சூடாமணி, கதர்மங்கலம், எல்லமேடு உள்ளிட்ட சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த பக்தர்கள் ஊர்வலமாக அலகு குத்தியும், அக்னி சட்டிகளையும், தீர்த்தகுடங்கள், பால்குடங்கள் கையில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
+
பின்னர் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குண்டத்தில் கோயிலின் பூசாரியார் தனது உடலினை சவுக்கால் அடித்து கொண்டு மூன்று முறை பூக்குழியினை சுற்றி வந்து பின்னர் அவர் முதலில் பூக்குழி இறங்கினார். பின்னர் பக்தர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இறங்கி நேர்த்திகடன்களை நிறைவேற்றினார்கள். முன்னதாக ஆலயத்தின் உள்ளே அலங்கரிக்கபட்ட மாசானியம்மன் அம்மனுக்கு சிறப்பு விஷேச பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை ஸ்ரீ மாசாணி அம்மன் அறக்கட்டளை மற்றும் சூடாமணி, எல்லமேடு, கதர்மங்கலம் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.