1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (19:48 IST)

தை கிருத்திகை நிகழ்ச்சியையொட்டி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த முருகன்

முருகன்
கரூரில் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு தை கிருத்திகை நிகழ்ச்சியையொட்டி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த முருகன்.
 
கரூர் நகரில் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் தை கிருத்திகையையொட்டி, இந்த ஆலயத்தில் பரிவாரத்தெய்வங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு விஷேச அலங்காரங்கள் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் காட்சியளித்தார். 
 
இந்நிகழ்ச்சியில் முருகனுக்கு கோபுர ஆரத்தி, கற்பூர ஆரத்தி, நட்சத்திர ஆரத்திகளை தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. 
 
இதற்கான முழு ஏற்பாடுகளை ஆலய ஸ்தானிக்கர் வசந்த் சர்மா மற்றும் கோயில் நிர்வாகத்தினர் மட்டுமல்லாது கட்டளை தாரர்களும் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் முருகனை ஏராளமானோர் வணங்கி முருகன் அருள் பெற்றனர்.