எப்படி ஹெல்மெட் அணிய வேண்டும்... காவல் நிலைய ஆய்வாளர் !
எப்படி ஹெல்மெட் அணிய வேண்டும் காவல் நிலைய ஆய்வாளர்
கரூர் அருகே எல்லைமேடு பகுதியில் 250 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஒட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கியதோடு, காவல்துறையினர் மற்றும் தனியார் கம்பெனி உரிமையாளர்கள் பேரணி நடத்தினர்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புஞ்சைகாளிக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட எல்லைமேடு கிராமத்தில், சின்னதாராபுரம் காவல்நிலையம், தும்பிவாடி மாஸ்டர் லிலன்ஸ் நிறுவனம் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் சேதுபதி, குமரவேல் மற்றும் எலவனூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் அப்பகுதியினை சார்ந்த 250 க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக ஹெல்மெட் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சின்னதாராபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அழகுராம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைவருக்கும் ஹெல்மெட் வழங்கியதோடு, ஹெல்மெட் வழங்கிய அனைவரையும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரணியாக அழைத்து சென்றார். இந்நிகழ்ச்சி அப்பகுதியில் மட்டுமில்லாமல், கரூர் மாவட்ட அளவில் பெரும் வரவேற்பினையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்தியது.
மேலும், ஹெல்மெட் இல்லாதவர்கள் வசதி இல்லாதவர்களுக்கு இந்த ஹெல்மெட் வழங்கப்பட்டதுடன், எப்படி ஹெல்மெட் அணிய வேண்டுமென்றும் காவல்நிலைய ஆய்வாளர் அழகுராம் எடுத்துரைத்து விழிப்புணர்வு வழங்கினார்.