செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : சனி, 8 பிப்ரவரி 2020 (20:51 IST)

கால்நடை மருந்து வழங்கும் மருந்தகத்தை தொடங்கி வைத்தர் அமைச்சர் விஜயபாஸ்கர் !

ஆண்டுக்கு 4 லட்சம் மதிப்பிலான கால்நடை மருந்து வழங்கும் மருந்தகத்தை கரூரில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
 
கரூர் மாவட்டம் ஆண்டான்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டான்கோவில் புதூர் பகுதியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவர் உடன்  கூடிய மருந்தகத்தை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.

இந்த கால்நடை மருந்தகத்தில் 1 ஆண்டுக்கு 4 லட்சம் மதிப்பிலான கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.இந்த கால்நடை மருந்தகத்தில் மூலம் சுற்றியுள்ள பல கிராமங்களிலுள்ள கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகள் மற்றும் தேவையான மருந்துகள் கிடைக்க முழு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கால்நடைகளுக்கு பூச்சி மருந்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் ஆண்டான்கோயில் ஊராட்சிமன்றத் தலைவர் சாந்தி சேகர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்