செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (11:24 IST)

அதிமுக அலுவலகத்திற்கு தீ வைப்பு; பாதுகாப்புக்கு போலீஸ் குவிப்பு

மன்னார்குடி அதிமுக அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


 

 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தின் முன் உள்ள கீற்று கொட்டகைக்கு அதிகாலை 4 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதிமுக அலுவலகத்தில் தீப்பற்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 
 
இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். ஆனால் கீற்று கொட்டகை முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகிகள் அதிமுக அலுவலகத்தை பார்வையிட்ட பின் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
 
இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதால் மன்னார்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் சென்னை சென்றுவிட்டனர். அதிமுக அலுவலகத்திற்கு தீவைக்கப்பட்டதால் மன்னார்குடியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளது.