திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (11:31 IST)

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து படுக்கைக்கு அழைத்த வாலிபர் கொலை...

பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து, தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்திய நபர் அப்பெண்ணின் கணவர் மற்றும் நண்பர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.


 
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசிப்பவர் நாகராஜ். இவர் ஒரு தறிப்பட்டையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  நாகராஜ் அவரது வீட்டின் அருகே வசிக்கும் காமராஜ் என்பவரின் மனைவி குளிக்கும் போது அவருக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
 
மேலும், அதை அப்பெண்ணிடம் காட்டி, தனது இச்சைக்கு இணங்கிவிடு, இல்லையேல் இதை வாட்ஸ்-அப்பில் அனைவருக்கும் அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், இதுபற்றி தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காமராஜ், நாகராஜிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  மேலும், தனது நண்பர்களோடு சேர்ந்த நாகராஜை தாக்கியுள்ளார்.
 
அதன்பின் மது அருந்துவதற்காக காமராஜ் தனது நண்பர்களுடன் டாஸ்மாக் சென்றுள்ளார். அப்போது, நகராஜும் அங்கு வந்துள்ளார். அவரைக் கண்டு ஆத்திரம் அடைந்த காமராஜ், செல்போனில் உள்ள வீடியோவை அழித்து விடு, மெமரி கார்டையும் கொடுத்து விட எனக் கூறியுள்ளார்.
 
அதில் தகராறு ஏற்பட மீண்டும் காமராஜும் அவரது நண்பர்களும் நாகராஜை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், அவர் மயங்கி விழுந்தார். அதன்பின் அவர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
 
இதையடுத்து, நாகராஜின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், காமராஜ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்துள்ளனர்.