செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (15:22 IST)

நர்ஸ் வேலை போர் அடித்ததால் 106 பேர் கொலை...

ஜெர்மெனியில் நர்ஸாக பணி புரிந்த ஒருவருக்கு தனது பணி போர் அடித்ததால் 106 நோயாளிகளை விஷ் ஊசி போட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
ஜெர்மனியை சேர்ந்தவர் நீல்ஸ் ஹோகல் 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இரண்டு மருத்துவமனைகளில் நர்ஸாக பணிபுரிந்துள்ளார். 
 
ப்ரிமென் நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் ஐசியு பிரிவில் இருந்த 2 நோயாளிகளை நீல்ஸ் கொன்றது 2015 ஆம் ஆண்ட்ய் நிறுபிக்கப்பட்டது. 
 
இதன் பின்னர் இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நீல்ஸ் 106 நோயாளிகளை விஷ ஊசி போட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது. 
 
இதய செயல் இழப்பு அல்லது மொத்தமாக உடல் செயல் இழப்பை ஏற்படுத்த கூடிய மருந்தை ஊசி மூலம் நோயாளிகளுக்கு ஏற்றி அவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
போர் அடித்ததால் நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டேன். அவர்களும் இறந்துவிட்டார்கள் என்று பதிலளித்துள்ளார் நீல்ஸ்.