1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2017 (11:40 IST)

10 பேரை காதலித்த 70 வயது மூதாட்டிக்கு மரண தண்டனை!

10 பேரை காதலித்த 70 வயது மூதாட்டிக்கு மரண தண்டனை!

ஜப்பான் நாட்டில் 70 வயது மூதாட்டி ஒருவர் 10 பேரை காதலித்துள்ளார். அதில் மூன்று பேரை பணத்துக்காக விஷம் வைத்து கொன்றுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 
 
ஜப்பானின் கியோட்டா பகுதியில் சிசாக்கோ ககெகி என்ற 70 வயது பெண் வசித்து வருகிறார். இவர் தனது வயதுக்கு இணையான பணக்கார ஆண்களை காதலிப்பது போல நடித்து, அவரகளது சொத்துக்களுக்கு வாரிசு உரிமை மற்றும் காப்பீட்டு தொகையை கைப்பற்றியுள்ளார்.
 
இதுவரை அந்த மூதாட்டி மூன்று பேரை இதுபோல காதலிப்பது போல ஏமாற்றி அவர்களது சொத்துக்களை கைப்பற்றிய பின்னர் விஷம் வைத்து கொன்றுள்ளார். நான்காவது நபரை ஏமாற்ற  முயன்ற போதுதான் இவர் சிக்கியுள்ளார். மேலும் இந்த பெண் கடந்த 1994  முதல் 2013 வரை ஏழு நபர்களை காதலித்ததாக கூறப்படுகிறது.
 
அந்த ஏழு நபர்களும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதனால் அந்த நபர்களையும் மூதாட்டி பணத்துக்கு ஆசைப்பட்டு விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த மூதாட்டி இதுவரை நான்கு திருமணங்கள் செய்துள்ளார் எனவும், காதலர்களிடம் இருந்து சுமார் 7 மில்லியன் பவுண்ட் பணம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மூன்று நபர்களை விஷம் வைத்து கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த 70 வயது மூதாட்டி விரைவில் தூக்கிலிடப்பட உள்ளார் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.