ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

செல்போனில் பேசியதற்காக கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமி!

16 வயது சிறுமி செல்போனில் யாருடனோ பேசியதற்காக கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பழனி அரசு மருத்துவமனையில் 16 வயது சிறுமி வெளிக்காயங்களோடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதனை செய்ததில் அவரின் குரல்வளை நெறிக்கப்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து விசாரித்ததில் அந்த சிறுமி யாரோ ஒருவருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த அவரின் பெரியம்மா மகன் கழுத்தை நெறித்து தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது சம்மந்தமாக காவல்துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவிக்க, சிறுமியைத் தாக்கிய பாலமுருகன் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.