திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 அக்டோபர் 2021 (10:47 IST)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் … போக்சோ சட்டத்தில் கைது!

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் பகுதியில் விஜய் என்ற 20 வயது இளைஞர் 13 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

விருத்தாசலம் அருகே ஆலடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஜய். 20 வயதாகும் இவர் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 13வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் ஆலடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து விஜய் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.