1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 அக்டோபர் 2021 (10:11 IST)

மாமாவுக்கு திதி கொடுப்பதில் வாக்குவாதம்… அத்தையைக் குத்தி கொன்ற இளைஞர்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு முன் இறந்த மாமாவுக்கு திதி கொடுப்பதில் அத்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரைக் குத்தி கொலை செய்துள்ளார் இளைஞர் ஒருவர்.

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் வசித்து வந்த செல்வமுருகன், தாலுகா அலுவலகத்தில் தனிக்காவலராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து அவரின் மனைவி அருணா தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் செல்வ முருகனின் அக்கா மகனான முத்துக்குமார் நேற்று அவரின் மறைவு நிகழ்ந்து ஒரு ஆண்டு ஆனதை அடுத்து திதி கொடுக்க வேண்டும் என அத்தையிடம் சொல்லியுள்ளார். ஆனால் அருணாவோ இரு தினங்களுக்கு முன்பாகவே மகன்களை வைத்துக் கொடுத்து விட்டதாகக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. கோபத்தில் முத்துக்குமார் அருணாவைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட, போலிஸாருக்கு தகவல் செல்ல அவர்கள் வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.