1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 30 செப்டம்பர் 2021 (18:43 IST)

திருச்செந்தூர் உடன்குடியில் காவலர் மனைவி வெட்டிக்கொலை!

திருச்செந்தூர் அருகே உடன்குடியில் முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி  வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
திருச்செந்தூர் தாலுகா  காவல்நிலைய முன்னாள்  தனிப்பிரிவு காவலர் செல்வமுருகனின் மனைவி அருணா.  இவர் உடன்குடி பிள்ளையார் பெரியவன் தட்டு பகுதியிலுள்ள  வீட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த ஆண்டு இதே நாளில் செல்வமுருகன் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட அதே நாளில் ஓராண்டுக்குப் பிறகு அவரது மனைவியை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.