செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (15:53 IST)

நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் இறந்தாரா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்ததற்கு கொரோனா பாதிப்பு காரணம் என தகவல்கள் பரவி வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அவர் கொரோனா பாதிப்பினால் இறந்ததாக செய்திகள் வெளியாகி வந்தன.

இதுகுறித்து விளக்கமளித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் இறந்ததாக வெளியாகும் செய்திகள் தவறானவை ஆகும். கடந்த டிசம்பர் மாதம் முதலாக அவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். வீட்டிலேயே ஆக்ஸிஜன் உதவியுடன்தான் இருந்துள்ளார்.

அதன்பிறகு கடந்த 6 மாத காலமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதயம், நுரையீரல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் மாற்று உறுப்புகள் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவருக்கு கொரோனா ஏற்பட்டிருந்தாலும், தற்போது அவர் கொரோனாவால் இறக்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.