1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: சனி, 5 ஏப்ரல் 2025 (10:36 IST)

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

gold seized
தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு சவரன் 68,480 என விற்பனையான நிலையில் இன்று 66,480 ஆயிரத்து விற்பனை ஆகி வருகிறது. இரண்டே நாட்களில் ஒரு சவரனுக்கு 2000 ரூபாய் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
ஆனால் தங்கம் விலை இன்னும் குறையும் என்று எதிர்பார்ப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ரூபாய்   8,310 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 720 சென்னையில்  ரூபாய்  66,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,065 எனவும் ஒரு சவரன் ரூபாய் 72,520 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 103.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  103,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran