வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 மே 2022 (13:26 IST)

ஒப்பந்த ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு; ஊதிய உயர்வு! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணிபுரியும் பெண் ஒப்பந்த பணியாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் செவிலியர், மருத்துவ உதவியாளர் என பல ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த பணியாளர்களில் பெண் பணியாளர்களுக்கு 6 மாத காலம் மகப்பேறு விடுமுறை வழங்க முடிவெடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒப்பந்த பணியாளர்களில் 2,448 சுகாதார பணியாளர்களுக்கு மாத ஊதியம் 11 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.