திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (16:05 IST)

மாஸ்க் அணிய மக்கள் ஆர்வம்.. மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கொரோனா அதிகரிப்பதின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மாஸ்க்கை ஆர்வத்துடன் அணிவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில காலமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

நீண்ட நாட்களுக்கு பின் தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு 1,500ஐ நெருங்கியுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாஸ்க் அணிவது குறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ”உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மாஸ்க் அணிவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் 30-40 சதவீதம் மக்கள் முகக்கவசம் அணிவது மகிழ்ச்சியாக உள்ளது. இதனை இன்னும் அதிகரிக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். அதன்படி நாளை மயிலாப்பூரில் 50 ஆயிரம் பேருக்கு மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்” என கூறியுள்ளார்.