வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (10:51 IST)

அபராதம் இல்ல.. ஆனா மாஸ்க் கட்டாயம்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் கொரோனா மீண்டும் தலைதூக்க தொடங்கிய நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக குறைந்து வந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் தமிழகத்தில் மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை தவிர்க்க தொடங்கினர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் முகக்கவசம் அணிவது குறித்து அறிவுறுத்தியுள்ள மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழகத்தில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என்ற அறிவிப்புதான் திரும்ப பெறப்பட்டது. மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். தனி நபர் இடைவெளி கடைபிடிப்பது மிக அவசியம்” என கூறியுள்ளார்.