நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்: அமைச்சர் மா சுப்பிரமணியம் தகவல்!
நீட் தேர்வுக்கு எதிராக நாளை சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே சிஏஏ சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்று நாளை நீட்தேர்வுக்கு எதிராகவும் சட்ட மன்றத்தில் தீர்மானம் ஏற்றப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
இன்று தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ள நிலையில் நாளை நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவோம் என ஏற்கனவே திமுக தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இன்று நாளை தீர்மானம் இயற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தீர்மானத்தின் மூலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்