செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 8 செப்டம்பர் 2021 (16:55 IST)

அனைத்து ஜாதியினர்களும் அர்ச்சகர்: நீதிமன்றம் செல்லும் சுப்பிரமணியம் சுவாமி!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார் என்பதும் ஒரு சிலருக்கு அர்ச்சகர் பணியை நியமன ஆணையை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த சட்டத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும் வரவேற்ப்பை அளித்தாலும் பாஜக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக சுப்ரமணியசாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
இந்து சமய அறநிலைத்துறை சட்டப்படி இது தவறானது என்றும் அர்ச்சகரை நியமனம் செய்யும் உரிமை கோவில் அறங்காவலருக்கு மட்டுமே உண்டு என்றும் முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் கிடையாது என்றும் இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுப்பிரமணிய சாமியின் இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.