திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (09:12 IST)

நீட் தேர்வு அச்சம்: சேலம் மாணவர் தற்கொலை!

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நீட்தேர்வு அச்சம் காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மருத்துவ படிப்பிற்கான எம்பிபிஎஸ் படிப்பிற்கு நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுத ஆயிரக்கணக்கான மாணவர்கள் தயாராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்து இருப்பதாகவும் மீண்டும் நீட் தேர்வு எழுத விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தெரிகிறது
 
இன்று நீட் தேர்வை அடுத்து அவர் மிகவும் மீண்டும் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக சோகமாக இருந்த நிலையில் திடீரென அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது