வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (20:36 IST)

உங்களை நம்புவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல: சிஏஏ தீர்மானம் குறித்து காயத்ரி ரகுராம்

உங்களை நம்புவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல: சிஏஏ தீர்மானம் குறித்து காயத்ரி ரகுராம்
மத்திய அரசின் சிஏஏ சட்டத்திற்கு எதிராக இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்தார் என்பதும் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இந்த தீர்மானத்தின் போது வெளிநடப்பு செய்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த தீர்மானம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாஜக பிரபலம் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அளித்த வாக்குறுதி அறிக்கையை முதலில் செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் CAA பற்றி பேசலாம். தி.மு.க. திசை திருப்பும் அரசியல் செய்வதன் மூலம் தப்பிக்கிறார். முதலில் தமிழ் மக்களை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களை நம்புவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல