வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Updated : வெள்ளி, 9 ஜூலை 2021 (12:56 IST)

தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம்!

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில் "சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்! என்று கருணாநிதி நமக்குக் கற்றுத்தந்த வழியில், அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடனும் வாழ்த்துகளுடனும் நல்லாட்சி பீடுநடை போட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் மனமுவந்து வழங்கிய மகத்தான வெற்றியையும் அந்த மக்களுக்கான நல்லாட்சியையும் நம் உயிர்நிகர் தலைவர் பிறந்த திருக்குவளையிலும், அவர் தமிழ்க்கொடி ஏந்தி திராவிடக் கொள்கை முழங்கிய திருவாரூரிலும் நேரில் சென்று காணிக்கையாக்கி மகிழ்ந்திட, அவரது அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் ஒருமித்த நல்லாதரவுடன், உங்களில் ஒருவனான நான் மேற்கொண்ட பயணம் மனநிறைவை அளித்திருக்கிறது.

பெரியாரின் ஈரோடும், அண்ணாவின் காஞ்சியும், கருணாநிதியின் திருக்குவளை - திருவாரூரும் என்றென்றும் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும், இனித்திருக்கும் திராவிடத் திருத்தலங்கள். அவர்கள் ஏற்றி வைத்த லட்சியச் சுடரை ஏந்தி மேற்கொண்ட பயணத்தில், பேரிடர் நேரப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஏற்கெனவே பெரியாரின் ஈரோட்டுக்குப் பயணித்தேன். அண்ணாவின் காஞ்சிபுரம் இல்லத்திற்குச் சென்று, 'மக்களிடம் செல்' என்று அவர் வகுத்து தந்த பாதையில் திமுக ஆட்சி பீடுநடை போடும் என, அங்கிருந்த வருகையாளர் குறிப்பேட்டில் பதிவிட்டேன்.

ஈரோடு என்பது கருணாநிதியின் தன்மான குருகுலம். காஞ்சிபுரம் என்பது கருணாநிதியின் கன்னித் தமிழ்ப் பாசறை. அவர் பிறந்த திருக்குவளையும், வளர்ந்த திருவாரூரும் அவரது உயிர்க் காற்று கலந்த ஊர்கள்; நமக்கு லட்சிய உணர்வூட்டும் தலங்கள். உங்களில் ஒருவனாக, உடன்பிறப்புகளாம் உங்கள் அனைவரின் சார்பிலும்தான் திமுகவின் வெற்றிக்குப் பிறகான என் முதல் பயணத்தை மேற்கொண்டேன்.

ஜூலை 6-ம் நாள் திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து திருவாரூரை நோக்கிப் பயணித்தபோது, விமான நிலையத்திலிருந்தே திமுகவினரும் பொதுமக்களும் பெரும் வரவேற்பளித்தனர்திமுக முதன்மைச் செயலாளரான மூத்த அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரியலூர் மாவட்டச் செயலாளரான அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள்திமுக நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர்.

திமுக நிர்வாகிகள் பலரும், நான் கேட்டுக்கொண்டபடி பொன்னாடைகள், சால்வைகள், பூமாலைகள், பூங்கொத்துகள் இவற்றைத் தவிர்த்து, புத்தகங்களைப் பரிசளித்தனர். பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை நம்பிக்கையுடன் வழங்கினர்.

வழிநெடுக வாஞ்சைமிகு வரவேற்புகளை ஏற்றுக்கொண்டு, திருச்சி மாவட்ட எல்லையைக் கடந்துகருணாநிதி பிறந்த அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட எல்லைக்கு வந்தபோது அங்கும் திமுகவினரும் பொதுமக்களும் திரண்டிருந்து அன்பைப் பொழிந்தனர். திமுகவின் இருவண்ணக் கொடிகள் காற்றில் அசைந்து வரவேற்பை வழங்கின. தஞ்சை மாவட்டத்திலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் வழியெங்கும் எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் மக்கள் திரண்டிருந்தனர்