ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (12:08 IST)

லிப்ரா ரவீந்தரன் நடிக்கும் புதிய இசை ஆல்பம்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தரன் புதிதாக ஒரு இசை ஆல்பத்தில் நடிக்க உள்ளார்.

நடிகை வனிதாவின் திருமணம் குறித்து கருத்து சொல்லி அவரோடு மோதலில் ஈடுபட்டு பிரபலமானவர் தயாரிப்பாளர் ரவீந்தரன். அதன் பின்னர் அவர் வனிதாவோடு சமாதானம் ஆகி யுட்யூப் சேனலை தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இதனால் அவருக்கு இப்போது நடிப்பில் அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதன் தொடர்ச்சியாக இப்போது ரவீந்தரன் ஒரு புதிய இசை ஆல்பத்தில் நடிக்க உள்ளாராம்.