ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (12:04 IST)

மீண்டும் தூசு தட்டப்பட்ட குற்றப்பரம்பரை… நாயகனாக விஜய் சேதுபதி!

பாரதிராஜா இயக்க 20 ஆண்டுகளாக முயற்சி செய்துவரும் திரைப்படம் குற்றப்பரம்பரை.

கதாசிரியர் ரத்தினக்குமார் எழுதிய குற்றப்பரம்பரை திரைப்படத்தை சிவாஜி கணேசன், விஜய்காந்த் மற்றும் சரத்குமார் ஆகியவர்களை வைத்து உருவாக்க பல ஆண்டுகாலமாக முயற்சி செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் தானே நடிக்கவும் முடிவு செய்தார். ஆனால் அந்த படம் பல காரணங்களால் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் இடையில் இயக்குனர் பாலாவும் அதே போன்ற கதையை எடுக்க முயற்சி செய்ததால் இருவருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் எழுந்தன. ஆனால் அவரும் தொடங்கவில்லை. இந்நிலையில் இப்போது இயக்குனர் பாரதிராஜா மீண்டும் குற்றப்பரம்பரையை விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து இயக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.