புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (11:25 IST)

எங்களுக்கு மது கிடையாதா..? அண்டை மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மதுப் பிரியர்கள்!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளால் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடு உள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அண்டை மாவட்டங்களுக்கு மது வாங்க செல்வது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டாஸ்மாக் திறக்கப்படாத 11 மாவட்டங்களை சேர்ந்த மதுப்பிரியர்கள் மது வாங்க அண்டை மாவட்டங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. மதுக்கடை தடை அமலில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் புதுக்கோட்டை – தஞ்சாவூர் எல்லையான கைகாட்டியில் உள்ள மதுபானக்கடைகளில் குவிந்துள்ளனர்.

அதேபோல பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களும் மதுவாங்க வேறு மாவட்டங்களுக்கு விரைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.