1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (09:41 IST)

எதிர்ப்புகளுக்கிடையே டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவுக்கு பாமக, பாஜக போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழகம் போலி மது, கள்ள மது போன்றவற்றால் சீரழிந்துவிட கூடாது என்பதாலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும். கட்டுப்பாடுகளை மீறினால் மீண்டும் டாஸ்மாக் கடைகல் மூடப்படும்” என தெரிவித்துள்ளார்.