புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (10:41 IST)

மதுக்கடைகளை திறப்பது கண்டித்து மதுரையில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக  அரசு மதுக்கடைகளை திறப்பது கண்டித்து மதுரையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 
தமிழ்நாட்டில் கொரோனா பெறுந்தொற்று இரண்டாவது அலையின் தாக்கத்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் 11 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் நாளை முதல் மது கடைகள் தமிழக அரசு திறக்க உள்ளது. இதனை கண்டித்து பாஜகவினர் மதுக்கடைகளை திறக்ககாதே  என்ற வாசகம் எழுதிய பதாகைகளை ஏந்தி மதுரை பாஜக அலுவகத்தில் முன்பு மாவட்டத் தலைவர் சீனிவாசன் அதேபோல் நரிமேடு பகுதியில் பாஜக மூத்த நிர்வாகி டாக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் டீக்கடைகள் பெட்டி கடைகள் திறக்க அனுமதி இல்லாத நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் நிரந்தரமாக மதுக்கடையை மூட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.