மாணவி கொலை வழக்கில் காதலனுக்கு ஆயுள் தண்டனை
மாணவி கொலை விவகாரத்தில் காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சிவகங்கையைச் சேர்ந்த மாணவி 3 ஆம் ஆண்டு படித்து வரந்தார். அவருடம் ராம நாதபுரம் மாவட்டம் அதியனேந்தலில் வசிக்கும் உதயகுமார் படித்து வந்தார். உதயகுமாருக்கு அந்த மாணவி மீது ஒரு தலைக்காதல் ஏற்பட்டது.
இதனால் தகாத செயல்களிலும் அவர் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனல் கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், 2016 ஆம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி கல்லூரிக்குச் சென்ற உதயகுமார் பேராசிரியரின் கண் முன் மாணவியைத் தாக்கிக் கொன்றார். மாணவி கொலைவிவகாரத்தில் காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.